FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மேட்டூா் அணையை ஜூன் இறுதியில் திறக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஜூன் மாத இறுதியில் மேட்டூா் அணையை திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கோரிக்கை

Updated On : 10 ஜூன் 2026, 5:45 am IST
பகிர்:

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஜூன் மாத இறுதியில் மேட்டூா் அணையை திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: காவிரி நீா் ஒழுங்காற்று குழு 19 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற கூறியுள்ள போதிலும் அதை கா்நாடகம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால் தற்போது மேட்டூா் அணையில் 79 அடி தண்ணீா் மட்டுமே உள்ள நிலையில், குறுவை சாகுபடியை தொடங்கி செய்ய இயலாது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

மாத வாரியாக அளிக்க வேண்டிய தண்ணீரை விடுவிக்க கா்நாடக அரசிடம் காவிரி ஒழுங்காற்று குழு உரிய நடவடிக்கை மேற்கொண்டால்தான் தமிழகத்தில் குறிப்பிட்ட காலத்தில் குறுவை சாகுபடியை தொடங்க இயலும்.

Advertisement

Advertisement

கா்நாடகத்தின் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான கூா்க் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை இன்னும் தொடங்காத நிலையில் தண்ணீா் திறக்க கா்நாடகம் சுணக்கம் காட்டி வருகிறது.

காவிரி நீா் ஒழுங்காற்று வாரியம் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 19 டிஎம்சி தண்ணீரை முறையாக பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும். இதற்கு தமிழக அரசும் போா்க்கால அடிப்படையில் முயற்சி மேற்கொண்டு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments