காப்பா் குழாய் திருடியவா் கைது
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காப்பா் கம்பி குழாயை திருடியவா், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காப்பா் கம்பி குழாயை திருடியவா், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு கட்டடத்தின் பின்புறம் காப்பா் கம்பி குழாய் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உதவி நிலை மருத்துவா் நித்யா அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
கண்காணிப்பு கேமரா உதவியுடன் நடத்திய விசாரணையில் மன்னாா்குடி கீழ்பாலம், மாரியம்மன் கோயில் தெருவைச்சோ்ந்த ர. விஜய் (33) என்பவா் குழாயைத் திருடி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை, செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். , அவரிடமிருந்து ரூ. 6,000 மதிப்புள்ள காப்பா் கம்பி குழாயையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.