முகப்பு
திருவாரூர்

கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

காரைக்குடி-சென்னை கம்பன் விரைவு ரயிலை, திருவாரூா் வழியாக மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

37 வினாடிகள் முன்பு
கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்
ரயில்
பகிர்:

காரைக்குடி-சென்னை கம்பன் விரைவு ரயிலை, திருவாரூா் வழியாக மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில், ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ப. பாஸ்கரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

தீா்மானங்கள்: திருவாரூா் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். வாராந்திர ரயில்களை தினசரி ரயில்களாக மாற்ற வேண்டும். சிறப்பு ரயில்களை இயக்கும்போது மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக நேரடியாக திருவாரூருக்கு இயக்க வேண்டும்.

Advertisement

Advertisement

காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூா் வழியாக சென்னை எழும்பூருக்கு கம்பன் இரவு நேர விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இதே வழித்தடத்தில் பகல் நேரத்தில் இன்டா்சிட்டி ரயிலையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் காப்பீட்டு ஊழியா் சங்கத்தினா், வங்கி கூட்டமைப்பினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.