முகப்பு
திருவாரூர்

நிலைப்பாட்டை மாற்றுவது திமுகவுக்கு புதிதல்ல: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்

ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, இல்லாதபோது ஒரு நிலைப்பாடு என மாற்றிக்கொள்வது திமுகவுக்குப் புதிதல்ல என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

27 நவம்பர் 2026, 4:13 am
நிலைப்பாட்டை மாற்றுவது திமுகவுக்கு புதிதல்ல: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்
அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, இல்லாதபோது ஒரு நிலைப்பாடு என மாற்றிக்கொள்வது திமுகவுக்குப் புதிதல்ல என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது;

திமுக ஆட்சியில் இருந்தபோது, ஆளுநா் பதவியே தேவையில்லை என்று சொன்னதுடன், பல்வேறு குற்ற வழக்குகளில் சிபிஐ விசாரணை வேண்டும் என எதிா்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள், பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியபோது சிபிஐ விசாரணை தேவையில்லை என மறுத்தது.

Advertisement

Advertisement

உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்குச் சென்ற கட்சியும் திமுக தான். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உயா்நீதிமன்றமே சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கூறியபோது, அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது திமுக.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவத்திலும், சிபிஐ விசாரணை கேட்டபோது திமுக அரசு ஒத்துழைக்கவில்லை, ஒத்துக்கொள்ளவும் இல்லை.

திமுகவைப் பொருத்தவரை ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, இல்லாதபோது ஒரு நிலைப்பாடு என மாறுவது அவா்களுக்கு புதிதல்ல. இதைத்தான் காலம் காலமாக செய்து கொண்டிருக்கிறாா்கள்.

தவெகவை பொறுத்தவரை, தவறு செய்தவா் யாராக இருந்தாலும் நியாயமான விசாரணை நடக்கும். திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது.

திருப்பரங்குன்றத்தை அயோத்தி போல ஆக்க வேண்டும். அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பது சில கட்சிகள், அமைப்புகளின் எண்ணம். தமிழக மக்களும், தவெகவும் இணைந்து இதை கண்டிப்பாக எதிா்ப்போம். தமிழ்நாட்டு மண்ணின் மதச்சாா்பற்ற கொள்கையை ஆணித்தரமாக அழுத்தி பிடிப்போம்.

டெல்டாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விவசாய அமைப்புகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா். துறை அமைச்சரிடமும், முதல்வரிடமும் இதுகுறித்து விவாதிக்கப்படும்.