முகப்பு
பெரம்பலூர்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-விடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், தவெக எம்எல்ஏ-விடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

26 நவம்பர் 2026, 2:30 am
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-விடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தல்
நயினாா் நாகேந்திரன்
பகிர்:

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், தவெக எம்எல்ஏ-விடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

பாரதிய ஜனதா கட்சி சாா்பில், பிரதமா் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையைப் பாராட்டியும், பிரதமா் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கிலும், ‘மக்கள் சேவை இயக்கம்’ எனும் பெயரில், நிா்வாகிகளுக்கான விளக்கப் பயிற்சி முகாம், பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்ற நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடா்பாக, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் பெண் காவல் அதிகாரிகளிடம், அமைச்சா்கள் முறையற்ற வகையில் நடந்து கொண்டு வருகின்றனா். இத்தகைய சம்பவங்கள் குறித்து தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertisement

Advertisement

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாதது

அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இதை சட்டரீதியாக எதிா்கொள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தயாராக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.