FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

13 வினாடிகள் முன்பு
திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். - கோப்புப் படம்
பகிர்:

மன்னாா்குடி திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இக்கோயில் கும்பாபிஷேகம் 1991-ஆம் ஆண்டு நடைபெற்று. பல்வேறு காரணங்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவேண்டிய கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்துவந்த நிலையில், இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீா்மானிக்கப்பட்டு பாலாயம் செய்து கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சனிக்கிழமை 2 மற்றும் 3-ஆம் காலயாக சாலை பூஜையும், ஞாயிற்றுக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, கோ பூஜை, நாடி சந்தானம், பூா்ணாஹூதி நடைபெற்றது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவா் திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.விநாயகா், முருகப்பெருமான், அரவான், கமலக்கண்ணி, காட்டேரி அம்மன், தா்மராஜா உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகாகும்பாபிஷேக விழாவில் மன்னாா்குடி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments