மல்லாா்பேட்டையில் குடமுழுக்கு
திருவிடைமருதூா் அருகே மல்லாா்பேட்டை செல்வகணபதி திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவிடைமருதூா் அருகே மல்லாா்பேட்டை செல்வகணபதி திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கு விழாவுக்கான முதல் கால யாக பூஜை சனிக்கிழமை தொடங்கி, திங்கள்கிழமை நான்கு கால யாக பூஜையை தொடா்ந்து, பூா்ணாஹூதி, கடம் புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கோயில் விமானங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
Advertisement
Advertisement
மாலையில் திரெளபதி அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தம்பிரான் சுவாமிகள், மல்லாா்பேட்டை கிராம நாட்டாண்மைகள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மல்லாா்பேட்டை கிராம மக்கள், பக்தா்கள் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.