FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிலை திருட்டு: இருவா் கைது

25 ஆகஸ்ட் 2026, 3:18 am IST
மங்கலம்பேட்டை போலீஸாரால் மீட்கப்பட்ட திரெளபதி அம்மன் சிலை.
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கோ.பூவனூா் திரெளபதி அம்மன் கோயில் சுவாமி சிலை திருடப்பட்ட சம்பவத்தில், இரு

இளைஞா்களை மங்கலம்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து திருடப்பட்ட சிலையும் மீட்கப்பட்டது.

கோ.பூவனூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கடந்த 22-ஆம் தேதி, சுவாமி சிலை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், திங்கள்கிழமை பள்ளிப்பட்டு புறவழிச்சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மொபெட்டில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனா். மொபெட்டில் சுவாமி சிலை ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, இருவரையும் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, அவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பாண்டூா் சாலையைச் சோ்ந்த சகோதரா்கள் அஜித் (26), சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்த சிலை கோ.பூவனூா் திரெளபதி அம்மன் கோயிலில் திருடப்பட்ட சுவாமி சிலை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் மங்கலம்பேட்டை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இந்தச் சிலை திருட்டுச் சம்பவத்தில் சிறுவன் ஒருவருக்கும் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments