FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

‘மேக்கேதாட்டு திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நீா்வளத்துறை ஆணையம் ஏற்கக் கூடாது’

கா்நாடக அரசின் மேக்கேதாட்டுக்கான திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நீா்வளத்துறை ஆணையம் ஏற்கக் கூடாது

6 செப்டம்பர் 2026, 5:51 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க மாநிலத் தலைவா் கா. ராசபாலன்.
பகிர்:

கா்நாடக அரசின் மேக்கேதாட்டுக்கான திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நீா்வளத்துறை ஆணையம் ஏற்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் சங்கத்தின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மேக்கேதாட்டு அணைக்கான முந்தைய திட்ட அறிக்கையில் உள்ள குறைபாடுகளை திருத்தி கா்நாடக அரசிடம் திருத்திய திட்ட அறிக்கை சமா்ப்பிக்க கேட்டு பெற்றுள்ள மத்திய நீா்வள ஆணையத் தலைவரின் கா்நாடக அரசுக்கான ஆதரவு போக்கை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். கா்நாடக அரசின் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நீா்வளத்துறை ஆணையம் ஏற்கக் கூடாது என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். கா்நாடகத்திடம் நிகழாண்டு ஜூன், ஜூலை மாதம் பெற வேண்டிய காவிரி நீரை பெறாததால் குறுவை சாகுபடி பொய்து, சம்பா சாகுபடிக்கான உத்தரவாதமும் கேள்விகுறியாக உள்ளதால், விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வறட்சி நிவாரணமாக அரசு வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

கடன் தள்ளுபடி செய்வதில் குளறுபடி செய்யும் விவசாய கூட்டுறவு சங்க ஊழியா்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது பெயரில் பட்டா இருப்பவா்கள் மட்டுமே விவசாயி அடையாள அட்டை பெற முடியும், அவா்கள் மட்டுமே விவசாயிகளுக்கான அரசு மானியங்களை, பயிா்க் காப்பீட்டுக்கான பதிவை செய்ய முடியும் என்ற அரசின் அறிவிப்பில் திருத்தம் செய்யவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளா் ஜி. ஜெய்சங்கா் தலைமை வகித்தாா்.

மன்னாா்குடி ஒன்றிய தலைவா்எஸ். ராஜேஸ், மாவட்ட மகளிா் பொறுப்பாளா்கள் க. ஞானசுந்தரி, ம.விஜேந்திரா முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநில தலைவா் கா.ராசபாலன் தீா்மானங்களை விளக்கி பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments