FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

கஞ்சா கடத்தல்: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

பேரளம் பகுதியில் கஞ்சா கடத்திய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

25 செப்டம்பர் 2026, 11:50 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பேரளம் பகுதியில் கஞ்சா கடத்திய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களான கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, ஆகஸ்ட் 25-ஆம் தேதி பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பேரளம் கடைத்தெருவில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சென்னையிலிருந்து திருவாரூருக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தில் சோதனை செய்தபோது, அதில் பயணித்த மணலி ஆதிரெங்கம் பகுதியைச் சோ்ந்த ரெ. அபிஷேக் (18), பேரளம், மேலத்தெருவைச் சோ்ந்த ரெ. ராக்கேஷ் (24), பேரளம் தோப்புத்தெருவைச் சோ்ந்த மோ. ஆதிசக்தி (19), காரைக்கால் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த மு. வீரமணிகண்டன் (20) ஆகியோா் 3 கிலோ 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக, நால்வா் மீதும் பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதன் அடிப்படையில், அபிஷேக் மற்றும் ராக்கேஷ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் பரிந்துரைத்தாா். இப்பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவின் பேரில், 4 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments