FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

துக்ளகாபாத் கிராமத்தினர் ஷீலா தீட்சித்துடன் சந்திப்பு

புது தில்லி, அக். 8: தென்கிழக்கு தில்லியில் உள்ள துக்ளகாபாத் பகுதியில் கட்டடங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை அப் பகுதி மக்கள் சந்தித்தனர்.  700 ஆண

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

புது தில்லி, அக். 8: தென்கிழக்கு தில்லியில் உள்ள துக்ளகாபாத் பகுதியில் கட்டடங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை அப் பகுதி மக்கள் சந்தித்தனர்.

 700 ஆண்டுகள் பழமையான கிராமத்தைப் பாதுகாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இந்திய புராதன சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு அனுப்பியுள்ள நோட்டீûஸ நிறுத்தி வைக்க வேண்டும் என முதல்வரை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

 தில்லி எம்.பி. ரமேஷ்குமார் தலைமையில் வந்திருந்த குழுவினரிடம் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக ஷீலா தீட்சித் வாக்குறுதி அளித்தார். துக்ளகாபாதில் உள்ள பெங்காலி காலனியில் வீடு கட்டியிருப்பவர்கள் அந்த இடத்தை 7 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என புராதன சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு நோட்டீஸ் கொடுத்திருந்தது.

Advertisement

Advertisement

 நெடுங்காலமாக அப் பகுதியில் வசிப்பதால் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என குழுவினர் உறுதியாகத் தெரிவித்தனர். 2003-ம் ஆண்டு ஒரு முறை நோட்டீஸ் கொடுத்தபோது ஷீலா தீட்சித் தலையிட்டதால் அந்தப் பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்படாது என நாடாளுமன்றத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வாக்குறுதி தந்ததையும் இக்குழுவினர் முதல்வரிடம் நினைவுப்படுத்தினர்.

 அதிகாரி விளக்கம்: அந்த பகுதியில் லால் டோரா நீங்கலாக மற்ற அனைத்துப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டவை. 1995-ல் அந்தப் பகுதி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து பிரச்னை ஆரம்பமானது என இந்திய புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பின் தில்லி பகுதி தலைமை அதிகாரி முகமத் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments