FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

யமுனையில் மாசு அளவு அதிகரிப்பு: தில்லியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

புது தில்லி, அக். 8: யமுனையில் மாசு அளவு அதிகரித்திருப்பதால் தில்லி மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.  விஜய தசமியையொட்டி யமுனை ஆற்றில் துர்கையம்மன் சிலைகள்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

புது தில்லி, அக். 8: யமுனையில் மாசு அளவு அதிகரித்திருப்பதால் தில்லி மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

 விஜய தசமியையொட்டி யமுனை ஆற்றில் துர்கையம்மன் சிலைகள் பெரும் எண்ணிக்கையில் கரைக்கப்பட்டதால், தண்ணீரில் மாசு அளவு அதிகமானது. இதை அடுத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரைச் சுத்திகரிக்கும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

 முழு உற்பத்தித் திறன் அளவுக்கு சுத்திகரிப்பு நிலையம் செயல்படவில்லை. ஓரளவே தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. யமுனை ஆற்று நீரில் பெருமளவு மாசு கலந்து வந்ததால், ஹைதர்பூரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்று தில்லி ஜல் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

 இந்த சுத்திகரிப்பு நிலையம், தினசரி சராசரியாக 20 கோடி காலன் தண்ணீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

 தில்லியிலும் உத்தரப் பிரதேசத்திலும் யமுனை ஆற்றில் ஆங்காங்கே துர்கா தேவி சிலைகளை கரைத்ததால் தண்ணீரில் மாசு அளவு உயர்ந்துவிட்டது. சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீரைச் சுத்திகரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை சீரடையும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டதால், மேற்கு தில்லியில் சில இடங்களிலும் ரோஹிணியிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments