FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

10 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: பாஜக கோரிக்கை

புது தில்லி, அக். 8: தில்லி முழுவதும் உள்ள 10 லட்சம் குடிசைவாசிக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என தில்லி அரசுக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து அக்கட்சியின் தில்லி பிரதேச

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

புது தில்லி, அக். 8: தில்லி முழுவதும் உள்ள 10 லட்சம் குடிசைவாசிக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என தில்லி அரசுக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

 இது குறித்து அக்கட்சியின் தில்லி பிரதேச தலைவர் விஜேந்தர் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கை: தில்லியில் உள்ள 13 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 42 குடிசைப் பகுதிகள் உள்ளன. இவற்றில் 10 லட்சம் பேர் புனரமைப்பு மையங்களில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்பதற்கு தாற்காலிக இடத்துக்கு முறையான வீட்டுமனை பட்டா இல்லை. இவ்வாறு குடியிருக்கும் மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்கப்பட வேண்டும். பிரிவினையின் போது, இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் ஏராளம். இவர்கள் தாற்காலிக குடியிருப்பு முகாம்களில் தங்கினர். இது போன்ற 42 குடிசைப் பகுதிகள் தில்லியில் உள்ளன. இவர்களின் மக்கள்தொகை ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கான்கீரிட் வீடு வழங்கப்படும் என தில்லி மாநில அரசு அறிவித்தது. இந்த சூழலில், புனர்வாழ்வு மையங்களில் பல ஆண்டுகளாகக் குடியிருப்போருக்கு நில உரிமை பட்டா கிடைக்க வேண்டும். இவர்கள் குடியிருக்கும் தாற்காலிகக் குடியிருப்புகள் பழுதடைந்துள்ளன. அவற்றைச் சரி செய்ய வேண்டும். புனரமைப்பு மையங்கள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க வேண்டும். குடியிருக்கும் அனைவருக்கும் இலவச நில உரிமை பட்டாக்கள் கிடைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments