FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போர் வெற்றி பொன்விழா: ராஜபாதை பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றியின் பொன் விழாக் கொண்டாட்டத்தையொட்டி தில்லி ராஜபாதையில் செவ்வாய்க்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றியின் பொன் விழாக் கொண்டாட்டத்தையொட்டி தில்லி ராஜபாதையில் செவ்வாய்க்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி போக்குவரத்து காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பின் விவரம்: இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி பொன் விழா கொண்டாட்டம் மான்சிங் சாலை தொடங்கி, ஜன்பத் வரையிலான ராஜபாதை புல்வெளியில் செப்டம்பர் 15 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, மான்சிங் சாலை தொடங்கி, ஜன்பத் வரையிலான ராஜபாதை சாலை மூடியிருக்கும்.

இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த, ராஜபாதைக்கும், ஜன்பத்துக்கும் இடையில் வடக்கு பகுதியில் உள்ள பகுதி, மான்சிங் ரோடு, நேஷனல் ஸ்டேடியம், பைரோன் ரோடு ஆகிய பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கண்காட்சிக்கான நுழைவாயில் ஜன்பத் பகுதியிலும், வெளியேறும் வாயில் மான் சிங் சாலை பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. சி-ஹெக்ஸகன், நேஷனல் ஸ்டேடியம், பைரோன் ரோடு ஆகிய பகுதிகளிலிருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பைரோன் ரோடு பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு வழியாக வரும் பொதுமக்கள் மீண்டும் அதே இடத்துக்கு செல்ல ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள பஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தக் கொண்டாட்ட நிகழ்வையொட்டி புது தில்லி குறிப்பாக, சி-ஹெக்ஸகன், திலக் மார்க், புரானா கிலா ரோடு, ஷாஜகான் ரோடு, அக்பர் ரோடு, ஜன்பத், மான் சிங் ரோடு, வின்ட்ஸர் பிளேஸ், அசோகா ரோடு, மண்டி ஹவுஸ் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

எனவே, இந்த பகுதிகளில் உள்ள சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருக்குமாறும், அவற்றுக்கு பதிலாக மதுரா ரோடு, மதர் தெரஸா கிரஸன்ட் ஆகிய சாலைகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments