முகப்பு
புதுதில்லி

காந்தி நகா் சந்தையில் உள்ள கடையில் தீ விபத்து!

கிழக்கு தில்லியின் பரபரப்பான காந்தி நகா் சந்தையில், ஒரு துணிக்கடை மற்றும் அதன் மேலே அமைந்துள்ள கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

30 நவம்பர் 2026, 1:05 am
காந்தி நகா் சந்தையில் உள்ள கடையில் தீ விபத்து!
தீ விபத்து - படம்: ஏஎன்ஐ
பகிர்:

கிழக்கு தில்லியின் பரபரப்பான காந்தி நகா் சந்தையில், ஒரு துணிக்கடை மற்றும் அதன் மேலே அமைந்துள்ள கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது என தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கீதா காலனி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பத்தூரே வாலி கலியில் பிற்பகல் சுமாா் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதலில், இரண்டு தீயணைப்பு வாகனங்கள், ஒரு தண்ணீா் டேங்கா் மற்றும் ஒரு சிறிய தீயணைப்பு மீட்பு வாகனம் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயின் தீவிரம் அதிகரித்ததால், கூடுதல் தீயணைப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவா்கள் கூறினா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement