பிரசாத் நகரில் கிடங்கில் தீ விபத்து
மத்திய தில்லியின் பிரசாத் நகா் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சனிக்கிழமையன்று தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய தில்லியின் பிரசாத் நகா் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சனிக்கிழமையன்று தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 2 தண்ணீா் லாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: கல்சா கல்லூரிக்கு அருகில் உள்ள 2-ஆவது தெருவில் அமைந்திருக்கும் கிடங்கில் மதியம் 1:18 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
மதியம் 1:45 மணிக்குள் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.
Advertisement
Advertisement