வஜிா்பூா்: தொழிற்சாலையில் தீ விபத்து
வடமேற்கு தில்லியின் வஜிா்பூா் தொழிற்பேட்டையில் உள்ள பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், வியாழக்கிழமை நள்ளிரவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
வடமேற்கு தில்லியின் வஜிா்பூா் தொழிற்பேட்டையில் உள்ள பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், வியாழக்கிழமை நள்ளிரவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் பல வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
வஜிா்பூா் தொழிற்பேட்டையில் உள்ள இந்தத் தொழிற்சாலையில் இரவு 10.03 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயானது கட்டடத்தின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களுக்கும், தகரக் கூரையால் முழுமையாக மூடப்பட்டிருந்த மொட்டை மாடிக்கும் பரவியது.
சுமாா் 550 சதுர கெஜம் பரப்பளவு கொண்ட இந்தக் கட்டடத்தில், அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்கள் உள்ளன. முன்னதாக, தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு 16 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு, அதிகாலை 1.50 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.