FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி ஹோட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்பு

பஹார்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டலில் இருந்து, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 39 பெண்கள் மீட்கப்பட்டதாக தில்லி மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:43 am IST
பகிர்:

பஹார்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டலில் இருந்து, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 39 பெண்கள் மீட்கப்பட்டதாக தில்லி மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், "இந்தப் பெண்கள் தங்களின் விருப்பத்துடனே அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும்; அவர்களின் உடம்பில் எந்தவித காயங்களும் இல்லை' என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
வெளிநாடுகளுக்கு பெண்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பஹார்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் தில்லி போலீஸாருடன் இணைந்து திடீர் சோதனை நடத்தினோம். அதிகாலை 6 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. அப்போது, அந்த ஹோட்டலில் வெறும் நேபாள நாட்டைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் அரபு நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்தனர். பெண்கள் நாடு கடத்தப்படும் பெரும் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் சோதனை குறித்து தில்லி போலீஸ் இணை ஆணையர் (மத்திய) மன்தீப் சிங் ரன்தவா கூறுகையில், "அந்தப் பெண்களிடம் நேபாள பாஸ்போர்ட்கள் இருந்தன. 16 பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டனர். மீதமுள்ளவர்கள் பரிசோதனைக்கு ஒப்புக் கொள்ளவில்லை' என்றார். இதனிடையே, பெண்கள் கடத்தப்படும் விவகாரத்தில் தில்லி துணைநிலை ஆளுநரும், மத்தியில் ஆளும் பாஜகவும் எந்த விட நடவடிக்கையும் எடுக்கவில்லை என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments