FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வடக்கு ரயில்வேயில் 300 ரயில்களின் புறப்பாடு,  வருகை நேரத்தில் மாற்றம்: நேற்று முதல் அமல்

வடக்கு ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் சுமார் 300 ரயில்களின் புறப்பாடு, வருகை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

வடக்கு ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் சுமார் 300 ரயில்களின் புறப்பாடு, வருகை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாறுதல் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான புதிய கால அட்டவணையையும் வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதன்படி குறிப்பிட்ட சில ரயில்கள் முந்தைய நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே வந்து சேரும். சில ரயில்களின் வருகை தாமதமாகும். அதேபோல சில ரயில்களின் புறப்படும் நேரமும் முந்தைய நேரத்தை விட முன்கூட்டியே செல்லும். சில ரயில்களின் புறப்படும் நேரம் தாமதமாகும். இந்த நேரம் மாற்றம் சுமார் 5 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: புதிய கால அட்டவணையின் படி, 57 ரயில்கள் முன்பு இருந்த நேரத்தைக் காட்டிலும் முன்கூட்டியே புறப்பட்டுச் செல்லும். 58 ரயில்கள் முந்தைய நேரத்தைக் காட்டிலும் சில நிமிடங்கள் தாமதமாகச் செல்லும். அதே போல 102 ரயில்களின் வருகை முந்தைய நேரத்தைக் காட்டிலும் முன்கூட்டியே வரும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 84 ரயில்களின் நேரம் முந்தைய நேரத்தை காட்டிலும் சில நிமிடங்கள் தாமதமாக வரும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் ரயில்வே கால அட்டவணை, ரயில்வேயின் இணைய தளம் ஆகியவற்றில் ரயில்களின் புறப்பாடு, வருகை நேரத்தை சரிபார்த்துக் கொண்டு அதற்கேற்றாற்போல பயணத் திட்டத்தை முடிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments