விவசாயப் பயன்பாட்டுக்கான மின்கட்டண உயர்வு: தில்லி அரசு மீது விஜேந்தர் குப்தா சாடல்
விவசாயிகளை தில்லி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா குற்றம்சாட்டினார்.
விவசாயிகளை தில்லி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை கூறியதாவது: விவசாயப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை தில்லி அரசு அதிகரித்துள்ளது. முன்பு, 1 கிலோ வாட் மின்சாரத்துக்கு ரூ.20 மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது அத்தொகை ரூ.125-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரத்துக்கு தில்லி அரசு அதிக வரி வசூலிக்கிறது. இது அநீதியாகும். இதனால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜன லோக்பால் மசோதாவை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை சட்டப்பேரவையில் கூறியிருப்பது முற்றிலும் பொய்யாகும். உண்மையில், ஜன லோக்பால் மசோதா மத்திய அரசிடம் காத்திருக்கவில்லை. அந்த மசோதா தில்லி அரசின் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் கைலாஷ் கேலட்டிடம் காத்திருக்கிறது. ஆம் ஆத்மி அரசு தங்கள் மீது தவறை வைத்துக் கொண்டு மத்திய அரசைக் குற்றம் சொல்கிறது. மேலும், சட்டப்பேரவையில் பொய்யான தகவலைக் கூறிய மணீஷ் சிசோடியா சட்டப்பேரவையிலும், தில்லி மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.