FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ராணி ஜான்சி நில மோசடி குற்றச்சாட்டில் உள்நோக்கம்: ஆம் ஆத்மிக்கு என்டிஎம்சி பதிலடி

ராணி ஜான்சி மேம்பாலத் திட்டத்தில் நில மோசடி நடைபெற்றுள்ளதாக முன்னாள் தில்லி மாநகராட்சி கூடுதல் ஆணையர் ரேணு ஜெகதேவ் தெரிவித்ததை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி சுமத்திய குற்றச்சாட்டுக்கு

Updated On : 24 மே 2018, 11:47 pm IST
பகிர்:

ராணி ஜான்சி மேம்பாலத் திட்டத்தில் நில மோசடி நடைபெற்றுள்ளதாக முன்னாள் தில்லி மாநகராட்சி கூடுதல் ஆணையர் ரேணு ஜெகதேவ் தெரிவித்ததை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி சுமத்திய குற்றச்சாட்டுக்கு வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பதிலடி கொடுத்துள்ளது.
தில்லி மாநகராட்சியின் கூடுதல் ஆணையராக இருந்த ரேணு ஜெகதேவ், கடந்த 18- ஆம் தேதி என்டிஎம்சி மேயருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ராணி ஜான்சி மேம்பாலத் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது.
இத்திட்டத்தில் வடக்கு தில்லி மாநகராட்சிக்குச் சொந்தமான 95 ஏக்கர் நிலம் மாநகராட்சியின் ஒப்புதல் இல்லாமல் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு (டிஎம்ஆர்சி) வழங்கப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை தனியார் நிறுவனம் தற்போது பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர்கள் திலீப் பாண்டே, அதிஷி மெர்லேனா ஆகியோர் ரேணு ஜெகதேவின் புகார் தொடர்பாக செய்தியாளரிடம் பேசுகையில், வடக்கு தில்லி மாநகராட்சி ஊழல்வாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் யோகேந்தர் சிங் மன் வியாழக்கிழமை தெரிவித்தது: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு என்டிஎம்சி சார்பில் நிலம் ஒதுக்கப்படவில்லை.
மத்திய அரசே நிலம் ஒதுக்கியது. இதில் என்டிஎம்சி எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அந்த நிலத்தை தனியாரின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது. அதற்கு டிஎம்ஆர்சிதான் பதில் அளிக்க வேண்டும்.
ரேணு ஜெகதேவ் சுமார் 9 ஆண்டுகளாக என்டிஎம்சியின் கூடுதல் ஆணையராக இருந்துள்ளார். தன்னுடைய பதவிக் காலத்தில் எவ்விதக் குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்ததில்லை. தற்போது பதவி நீட்டிப்பு வழங்கப்படாத நிலையில், அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவருடைய குற்றச்சாட்டுக்கள் உள்நோக்கம் கொண்டவை. அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments