FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மொஹல்லா கிளினிக்குகளை இன்று பான்-கீ-மூன் தலைமையிலான குழு பார்வை

தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் பான்-கீ-மூன் தலைமையிலான

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் பான்-கீ-மூன் தலைமையிலான "தி எல்டர்ஸ்' பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) பார்வையிட உள்ளது. 
மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலா தோற்றுவித்த அமைதி மற்றும் மனித உரிமைகளுக்காக பாடுபடும் "தி எல்டர்ஸ்' எனும் அமைப்பில் உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கீ-மூன் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநரும், நார்வே நாட்டின் முதல் பெண் பிரதமருமான க்ரோ ஹார்லெம் புருண்ட்லேண்ட் ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும், தில்லி முதல்வர் கேஜரிவால், சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தில்லியில் செயல்படும் மொஹல்லா கிளினிக்குகளை பார்வையிட உள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை இக்குழுவினர் பீராஹரி மொஹல்லா கிளினிக், பஸ்சிம் விஹார் பாலி கிளினிக் ஆகியவற்றைப் பார்வையிட உள்ளனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் கலந்துரையாட உள்ளனர். இத்தகவலை தில்லி அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments