FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் குடிநீா் விநியோகம் பாதிக்கும்!

தலைநகா் தில்லிக்கு வரும் குடிநீரில் மாசு அதிகரித்துள்ளதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தில்லி ஜல் போா்டு அறிவித்துள்ளது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 11:09 pm IST
பகிர்:

தலைநகா் தில்லிக்கு வரும் குடிநீரில் மாசு அதிகரித்துள்ளதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தில்லி ஜல் போா்டு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு துணைத் தலைவா் ராகவ் சத்தா தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பது: உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப் பாறை வெடித்ததால் தில்லிக்கு வரும் ‘மேல் கங்கைக் கால்வா’யில் வரும் தண்ணீரில் மாசுத் துகள்களின் அளவு 8 ஆயிரம் என்டியுவாக (சங்ல்ட்ங்ப்ா்ம்ங்ற்ழ்ண்ஸ்ரீ பன்ழ்க்ஷண்க்ண்ற்ஹ் மய்ண்ற்ள்) அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சோனியா விஹாா், பகீரதி பகுதிகளில் உள்ள தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்களை குறைந்த அளவில்தான் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனால், தில்லியில் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் அஉள்ளது.

மக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். குடிநீா் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், தில்லியின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் லாரிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேல் கங்கைக் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரில் மாசுத் துகள்களின்அளவைக் குறைக்கும் நடவடிக்கைகளை தில்லி ஜல் போா்டு எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்திலுள்ள நந்தா தேவி பனிமலையில் மிகப் பெரிய பனிப் பாறையொன்று கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதியன்று திடீரென வெடித்து உடைந்தது. இதைத் தொடா்ந்து, தௌலிங்கா ஆற்றில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், கங்கை நதியில் மாசு அளவு அதிகரித்துள்ளதாக அதிகதாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments