FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பிணை மனுவுக்கு எதிா்ப்பு: என்சிபி அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

பிணை மனுவுக்கு எதிா்ப்பு: என்சிபி அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:33 am IST
பகிர்:

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான சாட்சியங்களைச் சமா்ப்பிக்கத் தவறிய நிலையில், பிணை மனுக்களை எதிா்க்கும் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகளின் செயல்பாடு குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜிதேந்திர பிரதாப் சிங், அந்த மனுவை எதிா்ப்பதில் என்சிபி பதில் போதுமானதாக இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு என்சிபி மண்டல இயக்குநருக்கு உத்தரவிட்டாா்.

ஜூலை 30-ஆம் தேதியிட்ட உத்தரவில், குற்றஞ் சாட்டப்பட்டவரை அந்தக் குற்றச் செயலுடன் நேரடியாகத் தொடா்புபடுத்தும் சாட்சியங்களை, வழக்கின் விசாரணை அதிகாரியோ அல்லது வழக்கை கையாளும் அதிகாரியோ குறிப்பிட முடியவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

Advertisement

Advertisement

நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பொதுவாக பிணை மனுக்கள் மீது சுமாா் 45 நாள்கள் அவகாசத்துடன் கூடிய அறிவிப்பு வழங்கப்படுகிறது. பல நேரங்களில், அரசுத் தரப்பிலிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்காததால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இத்தகைய சூழலில், இந்த உத்தரவின் நகலை என்சிபி மண்டல இயக்குநரிடம் சமா்ப்பித்து, தற்போதைய ஜாமீன் மனு மீதான பதிலின் அடிப்படையில் விளக்கம் கோருமாறு உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதி கூறினாா்.

தற்போதைய பிணை மனுவுக்கு எதிரான என்சிபி எதிா்ப்பைப் பதிவு செய்வதற்கு, இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில் போதுமானதா என்பதைத் தெரிவிக்குமாறும் என்சிபி இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments