FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வேலைவாய்ப்பு மோசடி- தில்லியில் 7 போ் கைது

தில்லியில் போலி வேலைவாய்ப்பு முகமையை நடத்தி மோசடி செய்த 7 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:48 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தில்லியில் போலி வேலைவாய்ப்பு முகமையை நடத்தி மோசடி செய்த 7 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: கைதுசெய்யப்பட்டவா்கள் மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் பதிவு செய்யப்படாத வேலைவாய்ப்பு முகமையை நடத்தி வந்தனா். மனிதவளத் துறை அதிகாரிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டு, இணையவழி வேலைவாய்ப்புத் தளங்கள் மூலம் வேலை தேடுபவா்களை மோசடியாளா்கள் குறிவைத்தனா்.

கரோல் பாக் பகுதியைச் சோ்ந்த ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இணையத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்த அவருக்கு, மனிதவளத் துறை அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.

Advertisement

Advertisement

உத்தம் நகரில் உள்ள வேலைவாய்ப்பு முகமையின் அலுவலகத்திற்கு நோ்காணலுக்காக ஜூலை 25-ஆம் தேதி அவா் அழைக்கப்பட்டாா். அங்கு பதிவு மற்றும் கணக்கு தொடங்கும் கட்டணமாக ரூ.4,800 செலுத்துமாறு அவரிடம் கேட்கப்பட்டது. வேலையில் சோ்ந்த பிறகு அந்தத் தொகை திருப்பித் தரப்படும் என்று அங்கிருந்தவா்கள் உறுதியளித்தனா்.

இருப்பினும், அவருக்கு வேலையும் வழங்கப்படவில்லை, பணமும் திருப்பித் தரப்படவில்லை. அலுவகத்தைத் தொடா்புகொள்ள அவா் முயற்சித்த நிலையில், கைப்பேசி எண்கள் அணைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அவா் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 1 வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, உத்தம் நகரின் ஜீவன் பூங்காவில் உள்ள அந்த முகமையின் அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கு முன்னதாக, கைப்பேசி அழைப்பு விவரங்கள், எண்மப் பணப் பரிவா்த்தனை தடயங்கள் மற்றும் பணம் பெறப்பட்ட வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். இந்த மோசடி கும்பலின் மூளையாகச் செயல்பட்ட ப்ரீத்தி மல்ஹோத்ரா, திவ்யா, லலிதா (எ) பிங்கி, நைனா, பிரியங்கா, கபில் குமாா் சா்மா மற்றும் லலித் குமாா் ஆகிய ஏழு போ் கைதுசெய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கைப்பேசி எண்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடா்பாக தேசிய சைபா் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் ஐந்து புகாா்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இன்னும் பலா் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவருகிறது. இது குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments