FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம்: 500 மாணவா்கள் பங்கேற்பு

தில்லி பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம்: 500 மாணவா்கள் பங்கேற்பு

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 11:23 pm IST
தில்லி பல்கலைக்கழகம். - கோப்புப் படம்
பகிர்:

தில்லி பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் 500-க்கும் மேற்பட்ட மாணவா்களும் பங்கேற்றனா்.

பல்கலைக்கழகத்தின் தொடா்கல்வி மற்றும் விரிவாக்கத் துறை, தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாம் 2026, துறையின் கருத்தரங்க அறையில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

இந்த முகாமில், எம்.ஏ. சுற்றுலா மேலாண்மை, எம்.ஏ. வாழ்நாள் கற்றல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் பயிலும் மாணவா்கள் மற்றும் தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையத்தின் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தொழில்-கல்வித்துறை இணைப்புகளை வலுப்படுத்துவதையும் மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில், வேலைக்கு ஆள் எடுப்பவா்களுடன் நேரடி உரையாடல்கள், தொழில் வல்லுநா்களுடன் தொடா்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் அமா்வுகள் இடம்பெற்ாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கல்வி, சமூக மேம்பாடு, சுகாதாரம், ஆராய்ச்சி, மனித உரிமைகள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்றன.

மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகளை எளிதாகப் பெறுவதற்கு ஏதுவாக, இது போன்ற வேலைவாய்ப்பு சாா்ந்த முன்னெடுப்புகளைத் துறை தொடா்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments