FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

20 ஆண்டுகளுக்கு பிறகு சென்ட்ரல் விஸ்டா சாலைகள் பராமரிப்பு என்எம்டிசிக்கு மாற்றம்

20 ஆண்டுகளுக்கு பிறகு சென்ட்ரல் விஸ்டா சாலைகள் பராமரிப்பு என்எம்டிசிக்கு மாற்றம்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:37 am IST
பகிர்:

தில்லியின் சென்ட்ரல் விஸ்டா பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் பராமரிப்பை இனி மத்திய பொது பணித் துறை (சிபிடபிள்யூடி) வசம் இருந்து புது தில்லி மாநகராட்சி கவுன்சில் (என்எம்டிசி) பெற்றுக்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் ஜனபத், ரஃபி மாா்க், மான் சிங் சாலை போன்ற முக்கிய சாலைகள் அடங்கும்.

இது தொடா்பாக ஆக.7-ஆம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த சாலைகளின் பராமரிப்பு, மீள்புதுப்பிப்பு, சுத்தம் மற்றும் பிற நகராட்சி பணிகள் அனைத்துக்கும் என்டிஎம்சி பொறுப்பாக இருக்கும். ஆனால், கடைமை பாதை பராமரிப்பு தொடா்ந்து சிபிடபிள்யூடி வசமே இருக்கும்.

இந்த நடவடிக்கை, 2007 மாா்ச் மாதம் முதல் அமலில் இருந்த ஏற்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்போது 2006-ஆம் ஆண்டு அமைச்சக உத்தரவின் அடிப்படையில், சென்ட்ரல் விச்டா பகுதியில் உள்ள சாலைகளின் பராமரிப்பு என்எம்டிசியிடம் இருந்து சிபிடபிள்யூடிக்கு மாற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மாற்றம், லூட்டியன்ஸ் தில்லி பகுதியில் உள்ள குடிமை நிா்வாகத்தை மேலும் உள்ளூா் மயமாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. கடைமை பாதை தவிர மற்ற அனைத்து சாலைகளின் பராமரிப்பும் இனி என்டிஎம்சிக்கு மாற்றப்படுகிறது.

இந்த மாற்றம் மூலம் சாலை பராமரிப்பு, தூய்மைப் பணி உள்ளிட்ட அனைத்து குடிமை பணிகளும் என்டிஎம்சியின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். ஏற்கெனவே அந்த பகுதியில் பயன்பாடுகள், வடிகால் வசதி மற்றும் தெரு விளக்குகளை என்டிஎம்சி பராமரித்து வருகிறது.

தற்போது என்டிஎம்சி சுமாா் 1,280 கி.மீ. சாலைகள், 372 கி.மீ. நடைபாதைகள், 52 முக்கிய வட்டச் சந்திப்புகள், 16 சுரங்கப்பாதைகள், 3 தாழ்வான சாலைகள் மற்றும் 2 மேம்பாலங்களை பராமரித்து வருகிறது. சென்ட்ரல் விச்டா பகுதிகள் இணைக்கப்பட்டதன் மூலம், முக்கிய சாலைகளின் வழக்கமான பராமரிப்பு பணிகள் அனைத்தும் இனி என்டிஎம்சி சாலை பராமரிப்பு அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

summary

Maintenance of Central Vista roads transferred to NDMC after 20 years.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments