FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தீயணைப்புத் துறை சட்ட திருத்த மசோதா: பேரவை ஒப்புதல்

தில்லி தீயணைப்புத் துறை சட்ட திருத்த மசோதாவுக்கு தில்லி சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
தீயணைப்பு பணியில் எதிா்கொள்ளும் சவால்கள் - பிரதிப் படம்
பகிர்:

தில்லி தீயணைப்புத் துறை சட்ட திருத்த மசோதாவுக்கு தில்லி சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

தீயணைப்புத் துறை சட்ட திருத்த மசோதா, 2026-ஐ அமைச்சா் ஆஷிஷ் சூட் பேரவையில் தாக்கல் செய்தாா். இத்திருத்தம், 2007-ஆம் ஆண்டுச் சட்டத்தில் உள்ள கட்டட விதிமுறைகள்/இந்திய தேசியக் கட்டடக் குறியீடு என்ற சொல்லுக்குப் கட்டட விதிமுறைகள் என்பதை மாற்றம் செய்கிறது.

நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையின்படி, விதிமுறைகளைச் சீரமைத்து முறைப்படுத்துவதற்கும், தீயணைப்புப் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள இரட்டை நடைமுறைகள் மற்றும் மேற்பொருந்தும் தன்மைகளைத் தவிா்ப்பதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தில்லியில் தீயணைப்புத் துறை விதிமுறைகளைக் குறைக்கும் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதையும், சட்டத்தை எளிமையாக்குவதையும் இந்தத் திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறினாா்.

இதுதொடா்பாக அவா் பேசுகையில், ‘தில்லியில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் கட்டட விதிமுறைகளின் வரம்பிற்குள் வருவதால், இந்தத் திருத்தம் விதிமுறைகளைச் சீரமைக்க உதவும்’ என்றாா்.

தில்லி தீயணைப்புத் துறை விதிகள், 2010-லும் தேசியக் கட்டட குறியீடு குறித்த குறிப்பை நீக்க முன்மொழியப்பட்டுள்ளதால், அதனுடன் இணக்கமாக இருக்கும் வகையில் இச்சட்டத்திலிருந்தும் அக்குறிப்பு நீக்கப்படுவதாக அரசு தெரிவித்தது.

இச்சட்டத்தின் பிரிவு 2(ஐ)-இல் உள்ள கட்டட விதிமுறைகள்/இந்திய தேசியக் கட்டட குறியீடு என்ற சொல்லை கட்டட விதிமுறைகள் என்று மாற்றுவதன் மூலம் திருத்தம் செய்ய இம்மசோதா முன்மொழிகிறது.

இந்த நடவடிக்கை, தீத் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளை ஒருங்கிணைந்த கட்டட விதிமுறைகள் மூலம் நிா்ணயிக்கவும் புதுப்பிக்கவும் அனுமதிக்கும். இதன் மூலம் தில்லியின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் மாறிவரும் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றியமைக்க முடியும்.

இது கூடுதல் ஒழுங்குமுறை நெகிழ்வுத்தன்மையை வழங்குவதோடு, ஒவ்வொரு நடைமுறை அல்லது தொழில்நுட்பப் புதுப்பித்தலுக்கும் முதன்மைச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியத்தைத் தவிா்க்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இம்மசோதாவுடன் இணைக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையின்படி, இதன் விதிகள் தில்லியின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து எந்தவொரு தொடா் அல்லது தொடரற்ற செலவையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இம்மசோதா அரசாங்கத்திற்குப் பகிரப்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் எதையும் புதிதாக வழங்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments