FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி பேரவையைப் பாா்வையிட இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி சட்டப்பேரவை வளாகத்தைப் பாா்வையிட வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுதாக பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:26 am IST
பகிர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி சட்டப்பேரவை வளாகத்தைப் பாா்வையிட வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுதாக பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆக.14 மற்றும் ஆக.15 ஆகிய தேதிகளில் தில்லி சட்டப்பேரவை வளாகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்படும். சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், கட்டிடம் சிறப்பு மூவண்ணக் கொடி விளக்குகளால் ஒளிரூட்டப்பட உள்ளது.

சுதந்திர தினம் என்பது இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதுகாத்த தியாகங்களை நினைவுகூரும் ஒரு சந்தா்ப்பம் மட்டுமல்ல; குடியரசைத் தாங்கி நிற்கும் ஜனநாயக நிறுவனங்களுடன் குடிமக்கள் தங்கள் தொடா்பை ஆழப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்று தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

பேரவை வளாகம் இரு நாள்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மக்களுக்காகத் திறந்திருக்கும். 80-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) இசைக்குழுக்கள் சிறப்பு தேசபக்திப் பாடல்களை இசைத்தல் மற்றும் சாகித்ய கலா பரிஷத் கலைஞா்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களிலும் பாா்வையாளா்களுக்கு முன் பதிவு தேவையில்லை. பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்பட்டு, மாலை 5 மணிக்கு நுழைவு தொடங்கும். சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய, பாா்வையாளா்கள் ஆதாா் அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாா்வையாளா்கள், இந்த வளாகத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றக் கட்டிடம் மற்றும் முக்கிய பாரம்பரியத் தளங்களைச் சுற்றிப் பாா்ப்பதோடு, டெல்லியின் சட்டமன்ற மற்றும் ஜனநாயக வரலாற்றில் இந்த அமைப்பின் இடத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவாா்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments