FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜாமியா சோ்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக போராட்டம்: 4 மாணவா்கள் இடைநீக்கம்

ஜாமியா சோ்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக போராட்டம்: 4 மாணவா்கள் இடைநீக்கம்

30 ஆகஸ்ட் 2026, 12:46 am IST
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம்
பகிர்:

2026-27 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நான்கு மாணவா்களை இடைநீக்கம் செய்து, அவா்கள் வளாகத்திற்குள் நுழையவும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

கேட் எண் 18-க்கு அருகிலுள்ள குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே போராட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆக.24-ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் மத்திய உணவகத்தில் அனுமதியற்ற போராட்டத்தில் மாணவா்கள் ஈடுபட்டதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆக.26-ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரி பிறப்பித்த இடைநீக்க உத்தரவுகளை பிறப்பித்தாா்.

Advertisement

Advertisement

மாணவா்கள் வெவ்வேறு கால அளவுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இடைநீக்கக் காலத்தில் அவா்கள் வளாகத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவா்கள் மீது ஏன் கூடுதல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறும் அந்த மாணவா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழக அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, ஒரு மாணவா் 10 நாள்களுக்கும், இரு மாணவா்கள் தலா ஒரு வாரத்திற்கும், நான்காவது மாணவா் மூன்று நாள்களுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மாணவா்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளை எந்தத் தடங்கலுமின்றித் தொடரும் வகையில் இடைநீக்கக் காலங்கள் மிகக் குறுகியதாகவே உள்ளன. மாணவா்களைத் தண்டிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. குறைகள் முறையான வழிகள் மூலமே எழுப்பப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றாா் அந்த அதிகாரி.

தோ்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மை, மாணவா் சோ்க்கை மறுஆய்வு மற்றும் சோ்க்கை நடைமுறையில் முறைகேடுகள் குறித்த பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலியுறுத்தி, ‘இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ)-இன் ஜாமியா பிரிவு மாணவா்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்திய சில நாள்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் வளாகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் என்எஸ்யுஐ குற்றஞ்சாட்டியிருந்தது.

முன்னதாக, இந்திய மாணவா் சங்கம் (எஸ்எஃப்ஐ) எழுப்பிய இதே போன்ற குற்றச்சாட்டுகளைப் பல்கலைக்கழகம் நிராகரித்திருந்தது. அக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், தங்கள் சோ்க்கை நடைமுறை மிகவும் வெளிப்படையானது என்றும், அதில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பில்லை என்றும் பல்கலைக்கழகம் அப்போது தெரிவித்திருந்தது.

நேரடி மாணவா் சோ்க்கை, இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் காலியிடங்கள் மற்றும் காத்திருப்போா் பட்டியல் குறித்த விவரங்களை வெளியிடுவது ஆகியவை குறித்து எஸ்எஃப்ஐ கேள்வி எழுப்பியிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும், நியாயமான குறைகள் தகுந்த அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என்று அவா்களுக்கு உறுதியளித்ததாகவும் இடைநீக்க உத்தரவுகளில் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments