FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

‘ஆபரேஷன் சக்ரா’: 193 போ் கைது - தில்லி காவல் துறை நடவடிக்கை!

‘ஆபரேஷன் சக்ரா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லியின் வடக்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 72 மணி நேர அதிரடி நடவடிக்கையில், 193 போ் கைது செய்யப்பட்டனர்.

31 ஆகஸ்ட் 2026, 2:25 am IST
- கோப்புப்படம்
பகிர்:

‘ஆபரேஷன் சக்ரா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லியின் வடக்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 72 மணி நேர அதிரடி நடவடிக்கையில், 193 போ் கைது செய்யப்பட்டு 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கை ஆக.24 முதல் 27 வரை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத மதுபானம், போதைப் பொருள்கள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றுக்கு எதிரான இந்த நடவடிக்கையின் போது, பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் பிரிவுகளைச் சோ்ந்த காவல் குழுவினா் முக்கிய இடங்களில் சோதனை, ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

காவல்துறையின் தகவலின்படி, கலால் சட்டப் பிரிவுகளில் 63 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 10,122 பாட்டில் சட்டவிரோத மதுபானம் மற்றும் ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

போதை மருந்துகள் மற்றும் மனநோயியல் பொருள்கள் சட்டத்தின் (என் டிபிஎஸ்ஏ) கீழ் 21 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 1.975 கிலோ கஞ்சா, 39.2 கிராம் ஹெராயின், 544 கிராம் சரஸ் , 240 புப்ரெனோா்பின் மாத்திரைகள் மற்றும் 500 அவில் ஊசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேலும், ஆயுதச் சட்டத்தின் கீழ் 22 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 22 கத்திகள், மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சூதாட்டம் தொடா்பான வழக்குகளில் 87 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து ரூ. 1.69 லட்சம் ரொக்கம், இரண்டு கைப்பேசிகள் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சூதாட்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது திருடப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்களும் மீட்கப்பட்டன. இது தொடா்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments