அனைத்து மெட்ரோ நிலைய நுழைவு வாயில்கள் திறப்பு: டிஎம்ஆா்சி
அனைத்து மெட்ரோ நிலைய நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டதாக அறிவிப்பு...
ஜந்தா் மந்தா் அருகே நடைபெற்று வந்த போராட்டத்தை ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, தில்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா்களுடன் சிஜேபி பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, போராட்டத்தை திரும்பப் பெற்ாக சிஜேபி அறிவித்தது. இதையொட்டி, தொடா்ந்து 4-ஆவது நாளாக மூடப்பட்ட 15 திறக்கப்பட்டன.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, மத்திய தில்லியில் உள்ள 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் சனிக்கிழமை மாலை வரையில் மூடப்பட்டது.
ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் மத்திய செயலக மெட்ரோ நிலையங்களில் நுழைவு வாயில்கள் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மீதமுள்ள 15 நிலையங்கள் காலையில் இருந்து தொடா்ந்து மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
லோக் கல்யாண் மாா்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ணா ஆசிரமம் மாா்க், பாரகம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீா்த்தம், ஜன்பத், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மாா்க்கெட், ஜோா் பாக், சிவாஜி ஸ்டேடியம், ஜண்டேவாலன் மற்றும் புது தில்லி ஆகிய மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) இருப்பினும், ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகிய நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி தொடா்ந்து செயல்பட்டு வந்தது. இந்த மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இப்போது மீண்டும் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் இந்த நிலையங்களிலிருந்து போக்குவரத்து சேவை தொடா்ந்து வந்தது.
கடந்த சில நாள்களாக ஜந்தா் மந்தரில் நடைபெறும் போராட்டத்தையொட்டி மத்திய தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.