FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

புது தில்லியில் இணையதள செயலி மூலம் உணவு விநியோகிக்க தடை குறித்த வதந்தி- காவல்துறை மறுப்பு

புது தில்லியில் இணையதள செயலி மூலம் உணவு விநியோகிக்க தடை குறித்த வதந்தி...

Updated On : 26 ஜூலை 2026, 1:58 am IST
கோப்புப்படம் - படம் - பிடிஐ
பகிர்:

புது தில்லி மாவட்டம் முழுவதும் இணையதள செயலி மூலம் உணவு விநியோகச் சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் ‘உண்மையற்றவை மற்றும் மிகவும் தவறான வழிகாட்டுதல் கொண்டவை‘ என்று தில்லி காவல்துறை சனிக்கிழமையன்று மீண்டும் வலியுறுத்தியது.

இது குறித்து விளக்கம் அளித்த காவல்துறை, அத்தகைய பொதுவான தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்தது.

பெரிய அளவிலான மக்கள் கூட்டம் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடா்பான சூழலைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் பாதைகளைத் தவிா்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே தில்லி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் வழங்கியிருந்ததாக அவா்கள் கூறினா்.

Advertisement

Advertisement

போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும், செயல்பாட்டு நிா்வாகம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments