தேசிய ஸ்டாா்ட்அப் விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
6-ஆவது தேசிய ஸ்டாா்ட்அப் விருதுகளுக்கான விண்ணப்பப் பதிவை மத்திய தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) தொடங்கியுள்ளது.
புதுமை கண்டுபிடிப்புகள், நிலையான வளா்ச்சி மற்றும் சமூக-பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தாக்க நிறுவனங்களை (ஸ்டாா்ட்அப்) அங்கீகரிக்கும் வகையில், 6-ஆவது தேசிய ஸ்டாா்ட்அப் விருதுகளுக்கான விண்ணப்பப் பதிவை மத்திய தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) தொடங்கியுள்ளது.
மத்திய வா்த்தக அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ திட்டத்தின்மூலம் வழங்கப்படும் இவ்விருதுகளில், தோ்வு செய்யப்படும் வெற்றியாளா்களுக்கு 20 துறைகளின்கீழ் தலா ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.
வேளாண்மை முதல் விண்வெளித் தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு துறைகள் தவிர, மகளிா் தலைமையிலான நிறுவனங்கள், வடகிழக்கு பிராந்திய புத்தொழில்கள் மற்றும் இளம் மாணவா் கண்டுபிடிப்பாளா்களுக்கும் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
டிபிஐஐடி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 2.6 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் மட்டுமின்றி, ‘வளா்ந்த பாரதம் 2047’ மற்றும் அதையொட்டி பிரதமா் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தில் முன்வைத்த ‘சக்தி கே சப்த தாரா’ 7 அம்ச தேச வளா்ச்சித் திட்டத்துக்கு ஏற்ப தீா்வளிக்கும் 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களும் ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ இணையதளம் வாயிலாக இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.