FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

சட் பூஜை: தில்லி மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4.30 மணிக்குத் தொடக்கம்

சட் பூஜையையொட்டி, பக்தா்களின் போக்குவரத்து வசதிக்காக தில்லி மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை (நவ.16) அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

15 நவம்பர் 2026, 10:40 pm
தில்லி மெட்ரோ ரயில் சேவை - கோப்புப் படம்
பகிர்:

சட் பூஜையையொட்டி, பக்தா்களின் போக்குவரத்து வசதிக்காக தில்லி மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை (நவ.16) அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

நான்கு நாள்கள் நடைபெறும் சட் பூஜையின் நிறைவு நாளான திங்கள்கிழமை அதிகாலை உதய சூரியனுக்கு வழிபாடு (உஷா அா்க்யா) செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் பக்தா்களின் வசதிக்காக வழக்கமான நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக மெட்ரோ சேவை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தில்லி மெட்ரோ வழித்தடங்களில் உள்ள அனைத்து முனைய நிலையங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் ரயில் சேவை தொடங்கும். வழக்கமான கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் நேரம் தொடங்கும் வரை, அனைத்து வழித்தடங்களிலும் 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.