FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு.

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
பகிர்:

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்காக 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பச்சை, நீலம், மஞ்சல் வழித்தடங்களில் இன்றும் (நவ. 5) நாளையும் (நவ. 6) கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.

பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் இன்றும் நாளையும் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மஞ்சள் வழித்தடத்தில் 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல, அக்டோபர் மாதத்தில் 1.08 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் 10,240,136 பயணிகளும், கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்த 14.64 கி.மீ. நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில் 5,83,272 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

summary

Chennai Metro Rail administration has announced that additional metro trains will be operated for two days to cater to those traveling to their hometowns for Diwali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.