ஆயுத பூஜை விடுமுறை: இரண்டு நாள்களுக்கு ஞாயிறு அட்டவணையில் மெட்ரோ ரயில் இயக்கம்
ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை நாள்களையொட்டி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் பற்ற...
ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை நாள்களையொட்டி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அக். 19, அக் 20 ஆகிய இரண்டு நாள்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துளளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
Advertisement
Advertisement
நீலம் மற்றும் பச்சை வழித்தடம்:
காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் பின்வரும் இடைவெளியில் இயக்கப்படும்:
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை & இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை: ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும்.
மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை: ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை: ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும்.
மஞ்சள் வழித்தடம்:
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை: ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும்.
பயணிகள் இந்தச் சேவை மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
This headline indicates that due to the Ayudha Puja holiday, the metro rail services will follow the Sunday timetable for a duration of two consecutive days.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.