தீபாவளி விடுமுறை: நாளை (நவ. 9) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகையையொட்டி நாளையும் (நவ. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஞாயிறு கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நாளான இன்று (நவ. 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்ப நாளையும் (நவ. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீலம் மற்றும் பச்சை வழித்தடங்கள்
காலை 5 மணி - நண்பகல் 12 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும்
நண்பகல் 12 முதல் 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும்.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும்,
இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறையும் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வழித்தடம்
மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படவுள்ளது.