தீபாவளி: இன்று கூடுதல் மெட்ரோ ரயில் சேவை
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்காக இன்று (நவ. 6) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவது குறித்து...
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்காக இன்று (நவ. 6) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.
தீபாவாளி திருநாளையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று கூடுதல் சேவைகளை இயக்குகிறது.
பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak-hour) மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான மாலை 5.00 மணிக்கு பதிலாக, இன்று மாலை 4.00 மணிக்கே தொடங்கி, இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும்.
Advertisement
Advertisement
முனைய நிலையங்களிலிருந்து (Terminal Stations) புறப்படும் கடைசி மெட்ரோ ரயில் நேரம் (06.11.2026):
பச்சை மற்றும் நீல வழித்தடத்தில்: வழக்கமான இரவு 11:00 மணிக்கு பதிலாக, நள்ளிரவு 12:00 மணி வரை இயங்கும்.
மஞ்சள் வழித்தடத்தில்: வழக்கமான இரவு 9:00 மணிக்கு பதிலாக, இரவு 11:00 மணி வரை இயங்கும்.