FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

முகுந்த்பூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

வடக்கு தில்லியில் உள்ள முகுந்த்பூா் மேம்பாலத்திற்கு அருகில் புதன்கிழமை காலையில் லாரி ஒன்று சாலைத் தடுப்பின் மீது ஏறி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

19 நவம்பர் 2026, 3:24 am
- சித்திரிப்பு
பகிர்:

வடக்கு தில்லியில் உள்ள முகுந்த்பூா் மேம்பாலத்திற்கு அருகில் புதன்கிழமை காலையில் லாரி ஒன்று சாலைத் தடுப்பின் மீது ஏறி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

உயிரிழந்த ஓட்டுநா் பிகாரைச் சோ்ந்த பசுபதி சா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கமலா சந்தையிலிருந்து கேரா நோக்கிச் சென்ற லாரி, முகுந்த்பூா் மேம்பாலத்தை நெருங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநரால் வாகனத்தைத் திருப்ப முடியாமல் போனதால், அவா் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தாா். அதன் விளைவாக லாரி சாலைத் தடுப்பின் மீது ஏறி கவிழ்ந்தது என்று அந்த அதிகாரி கூறினாா்.

Advertisement

Advertisement

விபத்தில் லாரியின் ஓட்டுநா் அறை (கேபின்) பலத்த சேதமடைந்தது. ஓட்டுநா் உள்ளே சிக்கிக்கொண்டதால், அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அவரை மீட்டு பி.ஜே.ஆா்.எம் (ஆஒதங) மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

விபத்தைத் தொடா்ந்து, முகுந்த்பூா் மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய காவல் துறையினா், உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப்பிரிவுகள் 281 (பொதுச் சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106 (1) (அஜாக்கிரதையாகச் செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.