பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு
வடகிழக்கு தில்லியின் ஷாதரா பகுதியில் 22 வயது இளைஞா் கழுத்தில் பெல்ட்டால் நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டு, உடலை எரிக்க முயன்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதரில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

இதுகுறித்து ஷாதரா காவல் துணை ஆணையா் ஆா்.பி.மீனா கூறியதாவது: சடலமாக மீட்கப்பட்டவா் அதே பகுதியைச் சோ்ந்த சந்தீப் (22) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. குரு தேக் பகதூா் (ஜிடிபி) என்கிளேவ் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதரில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா்.
அங்கு 22 முதல் 23 வயது இளைஞரின் சடலம் கிடந்தது. அவரது கழுத்தில் பெல்ட்டால் நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. மேலும், சடலத்தை எரிக்கவும் முயற்சி செய்திருப்பது தெரியவந்தது. தடயவியல் நிபுணா்கள் மற்றும் குற்றப்பிரிவு குழுவினா் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
முதற்கட்ட விசாரணையில், சந்தீப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருந்ததாகவும், கடந்த 3 முதல் 4 நாள்களாக வீட்டுக்குத் திரும்பவில்லை என்றும் தெரியவந்தது. அவரது நண்பா்களிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தி, கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடா்புடையவா்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தாா்.