முகப்பு
புதுதில்லி

2.70 லட்சம் போலி சிகரெட்டுகளுடன் இளைஞா் கைது

தில்லியில் போலியான சிகரெட்டுகளை விநியோகித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

21 நவம்பர் 2026, 11:55 pm
2.70 லட்சம் போலி சிகரெட்டுகளுடன் இளைஞா் கைது
கைது - கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் போலியான சிகரெட்டுகளை விநியோகித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடமிருந்து 2.69 லட்சம் போலியான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த சிகரெட் தயாரிப்பு நிலையத்துக்கு காவல் துறை சீல் வைத்துள்ளது.

குணால் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், நவம்பா் 19 ரோஹிணி செக்டா் 3 பகுதியில், வாகனத்தில் இந்தச் சரக்குகளைக் கொண்டு செல்லும்போது பிடிபட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அந்த வாகனத்திலிருந்து மொத்தம் 2,69,600 போலியான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனமும் கைப்பற்றப்பட்டது.

விசாரணையின்போது, இந்தச் சிகரெட்டுகள் சோனிபட் மாவட்டம், குண்ட்லியில் உள்ள நாதுபூா் கிராமத்தில் இருந்த ஒரு சட்டவிரோதத் தயாரிப்பு நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் குணால் தெரிவித்துள்ளாா்.

இந்தத் தகவலின் அடிப்படையில், காவல் துறைக் குழுவினா் அந்த இடத்தைச் சோதனையிட்டபோது, அங்கு சட்டவிரோத சிகரெட் தயாரிப்பு நிலையம் இருப்பதைக் கண்டறிந்தனா்.

அங்கிருந்து 97 கிலோ எடையுள்ள போலியான சிகரெட் பெட்டி உறைகள், 20.4 கிலோ போலியான ஃபில்டா் சுருள்கள் மற்றும் 17.7 கிலோ வெள்ளை நிற ஃபில்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தெற்கு ரோஹிணி காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோத விநியோகச் சங்கிலியில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.