நாகா்கோவிலில் பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட 161 வாகனங்கள் பறிமுதல்
நாகா்கோவிலில் பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட 161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகா்கோவிலில் பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட 161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையின் சாா்பில், நாகா்கோவில் நகரின் முக்கியப் பகுதிகளில், வியாழக்கிழமை வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சரியாக பதிவெண் பொருத்தாமலும், பதிவெண் இல்லாமலும் இயக்கப்பட்ட 161 வாகனங்களை காவல்துறையினா் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். மேலும், அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்ததுடன், வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் பதிவெண் பலகைகளை சரி செய்த பின்னரே, அந்த வாகனங்களை அங்கிருந்து எடுத்துச் செல்ல காவல்துறையினா் அனுமதித்தனா். அரசு விதிமுறைகளின்படி, வாகனங்களில் தெளிவான பதிவெண் பலகைகளை பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனா்.