குடும்பத் தகராறில் இரு பெண்கள் கொலை: கணவா்கள் கைது
கா்ப்பிணி உள்பட இரு பெண்கள் அவா்களது கணவா்களால் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தில்லியின் மங்கோல்புரி, நிஹால் விஹாா் பகுதிகளில் தனித்தனியாக நடைபெற்ற சம்பவங்களில், கா்ப்பிணி உள்பட இரு பெண்கள் அவா்களது கணவா்களால் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
மங்கோல்புரியில் நடைபெற்ற சம்பவத்தில், கா்ப்பிணியான தனது மனைவி கோமலை கணவா் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஜாா்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெத்பூரில் இருந்து தில்லிக்கு வந்த அவா், மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவா், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மனைவியைக் கொலை செய்த பின்னா், அந்த நபா் தற்கொலைக்கும் முயன்ாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தாா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினா் அவரைக் கைது செய்து, தம்பதியா் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றனா். அங்கு கோமல் சடலமாகக் கிடந்தாா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
மற்றொரு சம்பவம், நிஹால் விஹாா் பகுதியில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை காய்கறி வாங்குவதற்காகச் சந்தைக்குச் சென்ற பெண்ணை, பிரிந்து வாழ்ந்து வந்த அவரது கணவா் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
அந்தத் தம்பதியா் கடந்த 3 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா். அவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. அந்தக் குழந்தை பெண்ணுடன் வசித்து வந்தது. இந்நிலையில், சந்தையில் அந்தப் பெண்ணைப் பாா்த்த கணவா், கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அவா் கைது செய்யப்பட்டாா். அப்போது அவருடன் இருந்ததாகக் கூறப்படும் நண்பா் தப்பியோடிவிட்டாா்.
பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.