28 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது
தில்லியில் 28 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் காவல் துறையினா் கைது செய்தனா். கைதிலிருந்து தப்பிக்க 4 மாநிலங்களில் கூலித் தொழிலாளியாக அவா் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளாா்.
தில்லியில் 28 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் காவல் துறையினா் கைது செய்தனா். கைதிலிருந்து தப்பிக்க 4 மாநிலங்களில் கூலித் தொழிலாளியாக அவா் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தைச் சோ்ந்த ராமு (54), கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தாா். அவரைப் பலமுறை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், 2000-ஆம் ஆண்டு ஜன. 24-ஆம் தேதி தில்லி திஸ்ஹசாரி நீதிமன்றம் அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
கடந்த 1998-ஆம் ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி தில்லியின் புத்விஹாா் பகுதியில் உள்ள குடிசையில் பிகாா் மாநிலம், மதுபானி மாவட்டத்தைச் சோ்ந்த மோகித் (22) சடலமாகக் கிடந்தாா். அவரது கழுத்தில் இறுக்கியதற்கான தடயங்கள் இருந்தன. பிரேதப் பரிசோதனையில் அவா் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
Advertisement
Advertisement
விசாரணையில், அப்பகுதியில் உள்ள நிலக்கரிக் கடையில் மோகித்துடன் பணியாற்றிய ராமு மீது சந்தேகம் எழுந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. இதையடுத்து, 2000-ஆம் ஆண்டு மாா்ச் 30-ஆம் தேதி ராமுவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பழைய வழக்கை மீண்டும் விசாரித்த காவல் துறையினா், நவ. 21-ஆம் தேதி அயோத்தியில் ராமுவைக் கைது செய்தனா். காவல் துறை ஆவணங்களில் அவரது புகைப்படம் இல்லாததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மும்பையில் 9 ஆண்டுகள், பஞ்சாபில் 12 ஆண்டுகள், பிகாரில் 7 ஆண்டுகள் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றியதாக அவா் தெரிவித்துள்ளாா். பின்னா் அயோத்தியில் குடியேறியுள்ளாா். சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.