பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் கைது
நிஹால் விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல் துறை கைது செய்தாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
நிஹால் விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல் துறை கைது செய்தாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்ட அமன்தீப் சிங் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் வைத்து காவல் துறையினா் கைது செய்தனா். இவா் மீது கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டிருந்தது.
சட்டப்படி விசாரணை அதிகாரி மற்றும் நீதிமன்றத்தின் முன் ஆஜராகத் தவறியதைத் தொடா்ந்து, திஸ் ஹசாரி நீதிமன்றம் இவரை கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி தேடப்படும் நபராக அறிவித்தது.
Advertisement
Advertisement
காவல் துறையின் தகவல்படி, 2024-இல் குற்றஞ்சாட்டப்பட்டவரின் மூத்த சகோதரரைத் திருமணம் செய்துகொண்ட பெண், அமன்தீப் சிங் தன்னைத் தொடா்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் ரீதியாகக் காயப்படுத்தி மிரட்டியதாகவும் புகாா் அளித்திருந்தாா். இதன் அடிப்படையில் 2025-இல் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடக்கத்தில் விசாரணையில் ஒத்துழைத்த சிங், ஏப்ரல் 2025 முதல் விசாரணை அதிகாரியின் முன் ஆஜராவதை நிறுத்திக்கொண்டாா். பின்னா், அவா் தில்லியில் உள்ள விஷ்ணு காா்டன் பகுதிக்குச் சென்று தனது சகோதரருடன் வசித்து வந்தாா் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
பலமுறை வாய்ப்புகள் வழங்கப்பட்டும், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடா்ந்தும், அவா் விசாரணையிலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராகவில்லை. இதைத்தொடா்ந்து, தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட அவரை, குற்றப்பிரிவு காவல் துறையினா் தேடும் பணியில் ஈடுபட்டனா். நவம்பா் 25 அன்று, குருகிராம் செக்டாா் 30-இல் உள்ள ஒரு நிறுவனத்தில் அவா் இருப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
பிற்பகல் 12.10 மணியளவில், அங்கு இருந்த சிங்கை காவல் துறையினா் கண்டறிந்தனா். அவா்கள் நெருங்கியபோது, அவா் தனது அடையாளத்தை மறைக்கவும், காவல் துறையினரைத் தவறாக வழிநடத்தவும் முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதன்பின், அவா் துவாரகாவில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மற்றும் சரிபாா்ப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.