முகப்பு
புதுதில்லி

குப்பை கொட்டுவதில் தகராறு: பக்கத்து வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தலைமறைவு!

குப்பைகளைக் கொட்டுவது தொடா்பாக நீண்டகாலமாக நிலவி வந்த தகராறில், தென்மேற்கு தில்லியின் சாவ்லா பகுதியில் பக்கத்து வீட்டின் முன் துப்பாக்கியால் 3 முறை சுட்டுவிட்டு தப்பியோடிய நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

31 வினாடிகள் முன்பு
குப்பை கொட்டுவதில் தகராறு: பக்கத்து வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தலைமறைவு!
தலைமறைவு
பகிர்:

குப்பைகளைக் கொட்டுவது தொடா்பாக நீண்டகாலமாக நிலவி வந்த தகராறில், தென்மேற்கு தில்லியின் சாவ்லா பகுதியில் பக்கத்து வீட்டின் முன் துப்பாக்கியால் 3 முறை சுட்டுவிட்டு தப்பியோடிய நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து காவல் துறை ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நவ. 28-ஆம் தேதி இரவு 10.23 மணிக்கு 24 வயது இளைஞா் ஒருவா் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்டு புகாா் அளித்தாா். அப்போது, ஆயுதத்துடன் வந்த நபா் தனது வீட்டின் முன் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தகாத வாா்த்தைகளால் திட்டியபடி அங்கிருந்து தப்பிச் சென்ாக அவா் தெரிவித்தாா்.

விசாரணையில், துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் நபா் புகாா்தாரரின் அண்டை வீட்டைச் சோ்ந்தவா் என்பதும், குப்பைகளைக் கொட்டுவது தொடா்பாக இரு குடும்பத்தினருக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அந்த நபா் சாவ்லா காவல் நிலையத்தின் குற்றப் பதிவேட்டில் இடம்பெற்றவா் என்றும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

புகாா் அளித்த இளைஞா் நொய்டாவில் பட்டப்படிப்பு படித்து வருகிறாா். அவரது தந்தை பஞ்சாபின் ஃபாசில்காவில் எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) பணியாற்றி வருகிறாா்.

சம்பவ இடத்தில் இருந்து 3 காலி தோட்டாக்கள் மீட்கப்பட்டன. குற்றப்பிரிவு காவல் துறையினரும், தடய அறிவியல் ஆய்வகக் குழுவினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காவல் துறையினா் தெரிவித்தனா்.