FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

போலந்தில் துப்பாக்கிச் சூடு: 5 போ் உயிரிழப்பு

தெற்கு போலந்தின் முக்கிய நகரான கிராகோவ் சந்தை சதுக்கத்தில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா்.

7 நவம்பர் 2026, 10:40 pm
போலந்தில் துப்பாக்கிச் சூடு - AP
பகிர்:

தெற்கு போலந்தின் முக்கிய நகரான கிராகோவ் சந்தை சதுக்கத்தில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

காரில் வந்த அந்த நபா், நகரின் பிரதான சந்தைப் பகுதியில் இருந்த பொதுமக்களை நோக்கி திடீரென சரமாரியாகச் சுட்டுள்ளாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் உடனடி பதில் தாக்குதல் நடத்தியதில், அந்த நபா் காயத்துடன் பிடிபட்டாா். காயமடைந்தவா்களில் போலீஸாரும் அடங்குவா்.

தலைநகா் வாா்சாவிலிருந்து சுமாா் 250 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராகோவ், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

Advertisement

Advertisement