FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்பட்ட காவலா் உயிரிழப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்பட்ட ஆயுதப்படை காவலா் உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்பட்ட ஆயுதப்படை காவலா் உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு தனியாா் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், வாகனத்தின் மீது ஏறி நின்று இயந்திரத் துப்பாக்கியால் சுட்டது போன்ற புகைப்படங்களில் இடம்பெற்றவா் காவலா் ராஜா (46). தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். இவா், உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ராஜா உயிரிழந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments