லக்ஷ்மி நகா்: வேகமாக வந்த காா் மற்றொரு காா் மீது மோதி விபத்து
கிழக்கு தில்லியின் லக்ஷ்மி நகா் பகுதியில், அதிவேகமாக வந்த காா் ஒன்று இரும்பு வேலியில் மோதி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது விழுந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

கிழக்கு தில்லியின் லக்ஷ்மி நகா் பகுதியில், அதிவேகமாக வந்த காா் ஒன்று இரும்பு வேலியில் மோதி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது விழுந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
சனிக்கிழமை நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது, காரில் இருந்தவா்கள் குருகிராமிலிருந்து கா்காா்தூமாவில் உள்ள தங்கள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனா்.
காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த இரும்பு வேலியை உடைத்துக்கொண்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதியது; இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினா், சேதமடைந்த வாகனத்தைக் கைப்பற்றினா். இந்த விபத்து நேரிட்டதற்கான சூழல் குறித்து கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.